N

8.6.11

கேபிஎன் பேருந்தில் 22 பேர் பலி: மீட்பு பணியில் 3 அமைச்சர்கள்

சென்னையிலிருந்து திருப்பூருக்கு 07.06.2011 அன்று இரவு கேபிஎன் அல்ரா கோச் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம், அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ், ரோட்டை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் டீஸல் டேங்க் வெடித்ததில் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இந்த விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியாகினர். டிரைவரும், பயணி ஒருவரும் இந்த விபத்தில் உயிர் தப்பினர். 

இச்சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வி.எஸ்.விஜய், சின்னையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று அமைச்சர்களும் பொதுமக்களுடன் இறந்தவர்களின் உடல்களை 108 ஆம்புலன்சில் ஏற்றினர். விடியற்காலை 4 மணி வரை பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிறகே அமைச்சர்கள் சம்பவ இடத்தை விட்டு கிளம்பினர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.