N

8.6.11

கேபிஎன் பேருந்து தீயில் கருகி 22 பேர் பலி: டிரைவரிடம் போலீசார் விசாரணை


கேபிஎன் பேருந்து தீயில் கருகி 22 பேர் பலியாகி உள்ளனர். விபத்தில் உயிர் தப்பிய டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து திருப்பூருக்கு 07.06.2011 அன்று இரவு கேபிஎன் அல்ரா கோச் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம், அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ், ரோட்டை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் டீஸல் டேங்க் வெடித்ததில் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உடல் கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் நாகராஜ் உயிர் தப்பியுள்ளார். அவரிடம் வேலூர் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.