N

12.6.11

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்

9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார் ராம்தேவ்.   ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவித்தார்.

போராட்டத்தை முடித்துக்கொண்ட ராம்தேவ் பழச்சாறு அருந்தியதாக ரவிசங்கர் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக, டெல்லியில் 4-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கிய பாபா ராம்தேவ், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். பிறகு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 7-வது நாளான நேற்று முன்தினம் ராம்தேவின் உடல்நிலை மோசம் அடைந்தது.

இதையடுத்து, அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கான வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியிலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருவதால், அதை கைவிட செய்ய மத்திய அரசு முயன்று வந்தது.   இதற்காக, வாழும் கலை அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கரின் உதவியை மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி நாடினார். ரவிசங்கரும், பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கைவிட செய்ய முயற்சிப்பதாக ஒப்புக்கொண்டார்.

அவர் டேராடூன் சென்றார். ஆஸ்பத்திரியில் ராம்தேவை சந்தித்து பேசினார். நேற்று இரண்டாவது தடவையாக ராம்தேவை சந்தித்து பேசினார். அப்போது, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ரவிசங்கர் கேட்டுக்கொண்டார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பாபா ராம்தேவுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்தார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ராம்தேவின் தலைமை தேவைப்படுவதால், அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் ராம்தேவ் இன்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.