N

12.6.11

ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷம் : நடிகர் விஜய்

இலங்கை இனப் படுகொலையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 ’’பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும்.

ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும், சரி சம உரிமைகளோடும் வாழ இந்த தீர்மானம் முதல் படியாக இருக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.