குர்பானிக் கொடுப்பது இப்ராஹிம் (அலை) அவர்கள் காலத்திலே முஸ் ம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டது. இதை நிறைவேற்றுபவர் முஸ் ம்களின் வழியில் நடந்தவர்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா க் (ர )
நூல் : புகாரி (5546)
அல்லாஹ்வின் அருளையும் ஆசியையும் பெருவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்துவருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ர )
நூல் : புகாரி (955) முஸ் ம் (3964)
ஒருவர் குர்பானிக் கொடுப்பதற்கு பதிலாக அப்பிராணிக்கு நிகரானத் தொகையை தர்மம் செய்யும் போது இந்த தர்மத்தை விட பிராணியை வாங்கி அறுப்பதே சிறப்பு பெறும். அறுப்பதை விட தர்மம் செய்வது மிகவும் எளிதான ஒன்றுதான். பிராணியை வாங்கினால் அதற்கு உணவு வழங்க வேண்டும். அது அசுத்தப்படுத்தும் இடங்களை தூய்மை செய்ய வேண்டும். அதை அறுப்பதற்கென்று பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். தர்மம் செய்யும் போது இந்த துயரங்கள் இருக்காது.
நபி (ஸல்) அவர்கள் கஷ்டம் இலகு என்று வரும் போது இலேசானதையே கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள். அறுப்பதும் தர்மம் செய்வதும் அந்தஸ்த்தில் சமம் என்று இருந்தாலோ அல்லது அறுப்பதை விட தர்மம் செய்வது சிறந்தது என்று இருந்தாலோ குர்பானிக்கு பதிலாக தர்மம் செய்யும் முறையை நபித்தோழர்களுக்கு கற்றுத்தந்திருப்பார்கள். குர்பானிக் கொடுப்பதற்கு நிகரான அல்லது அதை விட உயர்ந்த எந்த வழியும் இல்லாததால் நபி (ஸல்) அவர்கள் கஷ்டங்கள் இருப்பினும் குர்பானிக் கொடுப்பதையே காட்டித்தந்துள்ளார்கள். இதி ருந்து குர்பானியின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
குர்பானிக் கொடுப்பவர் பேணவேண்டியவை
துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறையி ருந்து குர்பானிக் கொடுப்பவர் நகம் முடி இவற்றில் எதையும் களையக்கூடாது. ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது தான் அவர் நாடுகிறார் என்றால் அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக்கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. துல்ஹஜ் பிறையை பார்த்து கொடுப்பதாக நாடினால் தான் இந்தத் தடை ஏற்படும்.
தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை.. அவருக்கு இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்பட்டாலும் வெட்டிக்கொள்ளலாம். உதாரணமாக அவரது கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வயை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றினால் போதுமானது.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்
அல்குர்ஆன் (2 : 286)
யார் அறுக்க வேண்டும்?
பொதுவாக எந்த ஒரு பிராணியாக இருந்தாலும் அதை முஸ் ம்கள் அறுத்தால்தான் அதை உண்ணுவது ஆகுமானதாகும். இணைவைப்பாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் அறுத்த பிராணிகளை உண்ணுவது ஹராமாக்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக வேதம் வழங்கப்பட்டவர்கள் அறுத்தவைகள் மாத்திரம் ஆகுமானவையே. ஏனென்றால் அல்லாஹ் நமக்கு ஆகுமானவைகளைப் பற்றிக் கூறும் போது வேதம்கொடுக்கப்பட்டவர்களின் உணவை குறிப்பிடுகின்றான். இதன் மூலம் இவர்களைத் தவிர மற்றவர்களால் அறுக்கப்பட்டதை உண்பது தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கிக் கொள்ளலாம்.
இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
அல்குர்ஆன் (5 : 5)
மேலும் நபி (ஸல்) அவர்கள் யஹþதிகள் கொண்டுவந்த உணவுகளை உண்டுள்ளார்கள்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை அன்பளிப்பாக கொண்டுவந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி ருந்து சிறிது உண்டார்கள். அவளைக் கொன்றுவிடுவோமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ர )
நூல் : புகாரி (2617)
ஆகையால் ஒரு முஸ் மோ அல்லது வேதம்வழங்கப்ட்டவனோ மாமிசத்தை கொடுத்தால் அதை உண்ணுவது கூடும். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தார்களா இல்லையா என்று நாம் ஆராய வேண்டியதில்லை, நமக்குத் தெரியாவிட்டால் நாம் பிஸ்மில்லாஹ் கூறி உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா? என்பதை அறிந்துகொள்ளாமல் மாமிசங்களை உண்ணலாமா? என்று ஆயிஷா (ர ) அவர்கள் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் கூறி உண்ணலாம் என்று கூறினார்கள். முஸ் ம்கள் மற்றும் வேதம்வழங்கப்பட்டோர் ஆகிய இருவகையினருக்கும் ஒரேமாதிரியான சட்டங்கள்தான்.
ஒரு கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல் உண்ணுங்கள் என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : புகாரி (5507)
மேல் கூறப்பட்ட சட்டம் பெயர் கூறப்பட்டதா அல்லது இல்லையா என்று தெரியாத பட்சத்தில்தான். ஆனால் தெளிவாக அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லை என்று தெரியும் எந்த உணவையும் உண்ணக்கூடாது., ஏனென்றால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதையே உண்ண வேண்டும் என அல்லாஹ்வும் அவனுடையத் தூதரும் கூறியுள்ளார்கள்.
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பினால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
அல்குர்ஆன் (6 : 118)
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.
அல்குர்ஆன் (6 121)
இரத்தத்தை ஓட்டச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் (பிராணி) அறுக்கப்பட்டிருந்தாலும் (அது அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ராஃபிஉ பின் கதீஜ் (ர )
நூல் புகாரி (3075)
அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றவர்களின் பெயரைக் கூறி பிராணி அறுக்கப்பட்டிருக்கக் கூட்ôது. அவ் யாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுத்திருந்தால் இதை உண்பதும தடையாகிவிடும்.. அப்பிராணி குர்பாணிப் பிராணியாகவும் கருதப்படாது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக் கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டி ருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.)
அல்குர்ஆன் (5 : 3)
அல்லாஹ்விற்காகவும் நல்லடியார்களுக்காகவும் ஒருவன் ப யிட்டால் அதை உண்பதும் தடுக்கப்பட்டதுதான். அவனுடன் பிறரை இணையாக்கி புரியப்படும் எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இணைவைப்பதை விட்டும் நான் தேவையற்றவன். யார் ஒரு செய ல் என்னுடன் மற்றவர்களை இணையாக ஆக்ககுகிறானோ அவனையும் அவனது செயலையும் நான் (ஏற்றுக்கொள்ளாமல்) விட்டுவிடுகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹþரைரா (ர )
நூல் : முஸ் ம் (5300)
பிராணிகளை அறுத்த பின்பு அவற்றின் உயிர் பிரியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு உயிர் பிரிவதற்கு முன்பே அவற்றின் கழுத்தையோ அல்லது கால்களையோ வெட்டக்கூடாது. பிராணிகள் மிரலாமல் இருப்பதற்காக அவற்றின் கண்முன்னே கத்தியை தீட்டுவதையும் வேறொரு பிராணியை அறுப்பதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?
குர்பானிக் கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றின் பாலை அருந்துவதையோ அல்லது அவற்றின் மீது பயனிப்பதையோ அல்லது சுமைகளைத் சுமத்துவதையோ அல்லது அவைகளை உழுவதற்கு பயன்படுத்துவதையோ தவிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் அவற்றின் முடிகளை வெட்டியெடுத்து பயன்படுத்தவும் கூடாது. ஆனால் வெட்டுவதினால் பிராணிகளுக்கு நன்மை உண்டு என்றால் வெட்டிக்கொள்ளலாம்.
மிகத்தேவையுள்ள பட்சத்தில் மாத்திரம் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு ஒட்டகத்தைத் தவிர வேறு ஒட்டகம் இல்லை. இப்போது இவர் வேறு ஒட்டகத்தை பெறும் வரைக்கும் குர்பானி கொடுக்கவேண்டிய ஒட்டகத்தில் பயனிக்கலாம். அதி ருந்து பால் கரந்து அருந்திக்கொள்ளலாம். மற்றொன்று இருக்கும் போது இதை பயன்படுத்தக் கூடாது. மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதுபோன்றே சட்டம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர ) அவர்களிடம் ப ப்பிராணியில் ஏறிச்செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயணவாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜþரைஹ் (ரஹ்)
நூல் : முஸ் ம் (2346) (2347) நஸயீ (2752) அபூதாவுத் (1498) அஹ்மத் (14230)
நபி (ஸல்) அவர்கள் ஒருநபித்தோழர் சிரமத்துடன் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு சென்றதைப் பார்த்த போது அதில் ஏறி சவாரி செய்யும் படி கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர )
நூல் : புகாரி (1690)
நபி (ஸல்) அவர்கள் சிரமத்தின் போது வாகனிப்பதற்கு சலுகை வழங்கியுள்ளார்கள். இது போன்றே பால்கரப்பது போன்ற மற்றவிஷயங்களிலும் சிரமத்தின் போது அனுமதியுள்ளது என்றே விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடையாளமிடுதல்
அதிகமான ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்காக அவற்றில் ஏதாவதை தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். பெருநாளன்று எதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது. அடையாளம் இடுவது கட்டாயம் இல்லை. குர்பானிப் பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடையாளம் இடும் வழக்கம் இருந்தது.
இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யோகமாக பிராணிகள் வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லை. அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்கள் இம்முறையை கையாளுவது சிறந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ப ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயேத் திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுத்தில் போட்டு அவற்றுக்கு அடையாளச் சின்னமிட்டு இறையில்லம் கஃபாவிற்கு அவற்றை அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : புகாரி (2335) முஸ் ம் (2549)
குர்பானிக்காக ஒரு நல்ல பிராணியை வாங்கிவிட்டு பின்பு அதை விற்றுவிட்டு அதைவிட மட்டமான விலைகுறைந்த பிராணியை வாங்குவது கூடாது.
குர்பானி கொடுக்கும் போது கூறவேண்டியவை
அல்லாஹ்விற்காக நிறைவேற்றப்படும் இந்த வணக்கத்தில் ஏராளமான பித்அத்கள் ஊடுருவி இருக்கின்றன. அறுக்கும் போதோ அல்லது அறுத்தப் பின்போ ஃபாத்திஹா ஒதுவது மார்க்கம் என்று ம்க்கள் விளங்கிவைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களும் குர்பானிக் கொடுத்தார்கள். அவர்கள் பின்வரும் பிரார்த்தனையைத் தவிர வேறுஎதையும் செய்யவில்லை.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹþம்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆ முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : முஸ் ம் (3637) அபூதாவுத் (2410) அஹ்மத் (23351)
நாமும் குர்பானி கொடுக்கும் போது இறைவா இதை என்புறத்தி ருந்தும் என்குடும்பத்தார் புறத்தி ருந்தும் ஏற்றுக்கொள் என்று பிரார்த்தனை செய்து அறுக்க வேண்டும்.
எப்போது கொடுக்க வேண்டும்.
பெருநாள் மற்றும் அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் மொத்தம் நான்கு நாட்களுக்குள் குர்பானி கொடுக்க வேண்டும். தவிர்க்க முடியாத சில காரணங்கள் இருக்கும் போது மாத்திரம் நான்கு நாட்களுக்குப் பின்பு கொடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக குர்பானிக்கா வாங்கப்பட்ட ஆடு ஒடிவிட்டது. நான்கு நாட்கள் கழித்த பின்பே நம்முடைய கையில் கிடைக்கிறது. அல்லது குர்பானி கொடுப்பவர் வேறொருவரிடம் பொறுப்புசாட்டியிருந்து பொறுப்பேற்றவர் மறந்து கொடுக்காமல் இருந்துவிட்டார்.. இதுமாதிரியான சூழ்நிலைகளில் மட்டும் குறிப்பிடப்பட்ட நாட்களுக்குப் பின்பு கொடுக்கலாம். ஏனென்றால் நேரம் குறிக்கப்பட்ட தொழுகையை ஒருவன் மறந்தோ அல்லது உறக்கத்தினாலோ விட்டுவிட்டால் நேரம் கழிந்ததற்குப் பின்பு அவன் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தொழுகையை மறந்துவிட்டால் அல்லது அதைவிட்டும் உறங்கிவிட்டால் அதற்குரிய பரிகாரமாகிறது அவருக்கு நினைவுவரும் போது அவர் தொழுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா க் (ர )
நூல் : புகாரி (597) முஸ் ம் (1103)
ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதிவருபவற்றை அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜர் தொழுகைக்கும் லுஹர் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு (நன்மை) எழுதப்படுகிறது.
மேற்கண்ட இரு ஹதீஸ்களும் இக்கட்டான சூழ்நிலையில் ஒருவணக்கத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் நேரம்கழிந்தப் பின்பும் அதை நிறைவேற்றலாம் என்று கூறுகின்றன.
எத்தனைக்கொடுக்க வேண்டும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷா அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல் ல் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹþம்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆ முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : முஸ் ம் (3637)
ஹஜ்ஜþப்பெருநாளன்று நான் நபி (ஸல்) அவர்களுடன் முஸல்லா (என்னும் திட ல்) இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் தனது உரையை முடித்துவிட்டு மெம்பரி ருந்து இறங்கிவந்தார்கள். பிறகு அவர்களிடத்தில் ஒரு ஆடு கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹþ அக்பர் என்று கூறி அதை தம் கையால் அறுத்தார்கள் இது எனக்கும் எனது சமுதாயத்தில் குர்பானி கொடுக்காதவர்களுக்கும் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தனது சமுதாயத்திற்கும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்துள்ளார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுப்பது போதுமானது என்பதற்கு மேலுள்ள ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டு.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : திர்மிதி (1441) அபூதாவுத் (2427)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் முத்த ப் என்பவர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர மற்றனைவர்களும் ஏற்கத்தகுந்தவர்கள். இவர் எனக்கு அறிவித்தார் அல்லது நான் கேட்டேன் போன்ற வாசகங்களைக் கூறி அறிவித்தால் மாத்திரம் இவரது ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படும். இமாம் தஹாவீ அவர்கள் முத்த ப் செவியேற்றதை தெளிவாக அறிவிக்கும் விதத்தில் இந்த ஹதீஸை பதிவுசெய்துள்ளார்கள். ஆகையால் இந்த ஹதீஸ் நம்பகத்தன்மையைப் பெருகிறது. நபி (ஸல்) அவர்கள் தனக்கும் சமுதாயத்தில் குர்பானி கொடுக்காதவர்களுக்கும் சேர்த்து ஒரு ஆட்டையே கொடுத்துள்ளார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதுமானது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.
நோய் உள்ள ஆடுமாடுகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று மார்க்கம் கூறுகிறது. வயிற்றில் குட்டியை சுமக்கக்கூடி பிராணிகளை குர்பானி கொடுப்பதை தவிர்நது கொள்ள வேண்டும். ஏனென்றால் காய்ச்சல் நொண்டி காயம் போன்று கர்ப்பம் என்ற சிரமம் அதற்கு ஏற்பட்டுள்ளது. இதையும் ஒருவகையில் நோயுடைய பட்டிய ல் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி தாயை அறுக்கும் போது குட்டி வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும். மனிதாபிமானத்தையும் காரணமாகக் கொண்டு கற்பினி பிராணிகளை குர்பானி கொடுப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
பயணி மற்றும் பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?
வீட்டில் ஆண்களின் உதவியின்றி குடும்பத்தை நடத்தும் பெண்கள் வசதியைப் பெற்றிருந்தால் அவர்களும் தங்களுக்காக குர்பானி கொடுக்கலாம். குர்பானி என்பது ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் உரிய வணக்கமாகும். சொந்த ஊரில்தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. பிரயாணத்தில் இருப்பவர்களும் குர்பானி கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிற்காக மக்காவிற்கு சென்று தனது மனைவமார்களுக்கு குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நாங்கள் மினாவில் இருந்த போது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் இது என்ன என்று கேட்டேன். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர்களுக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : புகாரி (5548)
அனாதையின் சொத்தைப் பராமரிப்பவர்கள் அந்த அனாதையின் விருப்பதுடன் அவருக்காக அவர் குர்பானி கொடுக்கலாம். இது போல ஒருவர் தன்னுடைய பொருளை பராமரிப்பதற்காக ஒருவரை நியமித்திருக்கிறார் என்றால் இவர் சார்பில் அந்த பொருப்பாளர் அவரது அனுமதியுடன் குர்பானி கொடுக்கலாம். மேலுள்ள ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிகளின் சார்பில் குர்பானி கொடுத்துள்ளதாக கூறப்பட்டதி ருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை
பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். இரத்தம் உண்பதற்கு நமக்கு ஹராமாக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டக் காரியம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன் (2 : 173)
பிராணிகளின் தன்மைகள்
குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனித்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுக்கக்கூடாது.
அவர் (ஒரு அன்சாரித் தோழர்) இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹþரைரா (ர )
முஸ் ம் : (3799)
நோவினை செய்யக் கூடாது
இன்று பெரும்பாலும் குர்பானிப் பிராணிகள் சண்டைக்கு விடப்பட்டு நோவினை செய்யப்படுகின்றன. மற்றப் பிராணிகளைக் காட்டிலும் இப்பிராணிகளே இக்கொடுமைகளுக்கு ஆளாகின்றன். சிரமத்தின் போது குர்பானிப் பிராணியை பயன்படுத்திக் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கும் போது அதை நோவினை செய்யாமல் இருப்பதை ஒரு நிபந்தனையாக வைக்கிறார்கள். அதை முறையோடு பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரம் இந்த சலுகை.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர ) அவர்களிடம் ப ப்பிராணியில் ஏறிச்செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயணவாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜþரைஹ் (ரஹ்)
நூல் : முஸ் ம் (2346) (2347) நஸயீ (2752) அபூதாவுத் (1498) அஹ்மத் (14230)
சிலப் பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காது. மிரண்டு ஒடும். இப்ராணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காதப் பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றி ருந்து ஒர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்.
அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ்
நூல் : புகாரி (2488) முஸ் ம் (3638)
இறந்தவர்கள் சார்பாகக் குர்பானி
பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹþம்ம தகப்பல்மின் முஹம்மத் வஆ முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ர )
நூல் : முஸ் ம் (3637)
நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா சிறிய தந்தை அபூதா ப் ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் நேசித்த இவர்களுக்கு முத ல் குர்பானிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் உயிருடன் வாழும் தன் குடும்பத்தார்களுக்கு கொடுத்தார்களேத் தவிர மரணித்தவர்களுக்காகத் தரவில்லை.
இறந்தவர் மரணிப்பதற்கு முன்பு குர்பானி கொடுக்கும் படி யாரிடமாவது கூறிச் சென்றிருந்தாலோ அல்லது அவர் ஆசைப்பட்டிருந்தாலே அவர் சார்பில் கொடுக்கலாம். ஹஜ் செய்யவதாக நேர்ச்சை செய்துவிட்டு இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அல்லாஹ்வின் தூதரே) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய் என்று கேட்டார்கள். அவர் ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்) என்றார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமைபடைத்தவன் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர )
நூல் : புகாரி (6699)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு குர்பானிகொடுக்கலாமா?
அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ் யாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காக சில மக்கள் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானிக் கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.
யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்துவிட்டாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகிவிட்டது. அவர் முஸ் ம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ர )
நூல் : புகாரி (5545) முஸ் ம் (3624)
இந்த வணக்கத்தை அல்லாஹ்வைத்தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படி செய்தால் செய்பவர்கள் இணைவைத்தவர்களாக கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்ட ளையிடப்பட்டுள்ளேன்; முஸ் ம்களில்நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் (6 : 162)
அலீ (ர ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று கேட்கப்பட்டது. அலீ (ர ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஒர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையை சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத )புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,
அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ர )
நூல் : முஸ் ம் (3659)
நன்றி :கடய நல்லூர் இணையதளம்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.