
திருவனந்தபுரம், மத்திய ஆக்சிஜன் குழுமம், மாநிலங்களுக்கு இடையேயான ஆக்சிஜன் பகிர்தலைக் கண்காணித்து உறுதி செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சென்று சேர்வதை இந்தக் குழு உறுதி செய்கிறது. அதன்படி நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு...