N

25.1.12

குடியரசு தின விழா!!!

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக டெல்லியில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை சில இடங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.




அதன்படி, 26ம் தேதி காலை 6 மணி முதல் 12.30 மணி வரை ராஜீவ் சௌக், பட்டீல் சௌக், சென்ட்ரல் செகரடேரியட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ், பிரகதி மெய்டன், பராகம்பா சாலை, கான் மார்க்கெட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும், இந்த ரயில் நிலையங்களில் மாற்றுத் தடங்களில் இயக்கப்படும் ரயில்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, ஜனவரி 25ம் தேதி பிற்பகல் 2 மணி முதல், 26ம் தேதி பிற்பகல் 2 மணி வரை அனைத்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.




குடியரசு தின விழா அணிவகுப்பு நிறைவடைந்ததும் வழக்கம் போல ரயில் போக்குவரத்து சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




குடியரசு தின வாழ்த்துக்கள்

இமாம் ஷாபி பள்ளியில் நாளை அறிவியல் கண்காட்சி

அஸ்ஸலாமு அழைக்கும் நாளை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் தவராமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.



       நாளை கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்கள் வெளியிடப்படும்

17.1.12

அறிவகம் நடத்தும் தஃவா பயிற்சி முகாம்!


அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏக இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எவ்வாறு எத்திவைப்பது என்பதற்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 21.1.2012 அன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சி.எம்.பி லேனில் உள்ள ஏ.எல்.எம். பள்ளியில், அறிவகம் இஸ்லாமிய கலாசாலை சார்பில் நடைப்பெறவுள்ளது. இதில் பல ஆண்டுகள் தஃவா களத்தில் அனுபவம் வாய்ந்த தாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைந்து பயிற்றுவிக்க உள்ளனர். இஸ்லாமிய பற்றுடைய அனைவரும் கலந்து கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணி செய்யவதற்கு தயாராவோம்.
இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர்கள் செய்து வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9944329328 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

SFCC யின் வெற்றி ஒரு பார்வை

அஸ்ஸலாமு அழைக்கும், நமதூரில் சிறுவர்கள் முதல் முதியவர் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக் இருக்கிறார்கள். நமதூரில் கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் AFCC அணி அந்த அணிக்கு நிகரான ஒரு அணி SFCC(SYDNEY FRIENDS CRICKET CLUB)


குறுகிய காலத்திலேயே அதிக வெற்றியை குவித்திருக்கிறது இந்த வெற்றிக்கு காரணம் அந்த அணியின் துடிப்பான வீரர்கல் மற்றும் அணியின் நிர்வாகம் சிறப்புடையதாக இருப்பது தான் இந்த வெற்றிக்கு காரணம் . இவர்களின் வெற்றி மேலும் தொடர வாழ்த்துகிறோம்

நம்மிடமே கதிரியக்கம் இருப்பதால் கதிரியக்கம் குறித்து அச்சம் வேண்டாமாம்!



காய்கறிகளிலும், மனிதர்களிடமும், மருத்துவத் துறையிலும் இயற்கையாகவே கதிரியக்கம் உள்ளதால் அணுமின் நிலையத்தால் கதிரியக்கம் ஏற்படும் என யாரும் பீதியடைய வேண்டாம் என அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இயற்கை மற்றும் செயற்கை கதிர்வீச்சுகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் விஞ்ஞானி பரத்வாஜ் பேசியதாவது: கதிர்வீச்சுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் உள்ளன. அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு உள்ளதாக நினைக்க வேண்டாம். சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து கதிர்வீச்சு வெளிவருகிறது. 

இந்திய அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. அணுமின் நிலைய பகுதிகளின் கதிர்வீச்சு அளவும், மற்ற பகுதிகளின் கதிர்வீச்சு அளவுக்கும், எந்த வேறுபாடுமில்லை. எனவே அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு என பயப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிலும் கதிரியக்கம் உள்ளது. 

கதிரியக்கத்தால் புற்றுநோய் வருவதாக கூறப்படுவது தவறானது. மது, புகையிலை போன்ற பல்வேறு காரணங்களால் தான் புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதியில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் உடல்நலனை பரிசோதிக்க தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு நான்கு மாதங்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என கூறினார்.

16.1.12

எழிலகத்தில் தீ : பல ஆதாரங்களும் எரிந்தன


சென்னை சேப்பாக்கம் கடற்கரை சாலையில் கம்பீரமான 10 மாடி எழிலக கட்டிடம் உள்ளது. இங்கு பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. எழிலக கட்டிட வளாகத்திலேயே பின்புறமாக தபால் நிலையத்தையொட்டி 150 ஆண்டு பழமை வாய்ந்த இரட்டை மாடிகளுடன் இரு கட்டிடங்கள் இருக்கிறது.


ஒரு கட்டிடத்தில் தொழில் வணிக துறை இயக்குனர் மற்றும் ஆணையர் அலுவலகமும் மற்றொரு கட்டிடத்தில் சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தொழில் வணிகத் துறை அலுவலக கட்டிடத்தில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென்று பரவி அருகில் இருந்த சமூக நலத்துறை இயக்குனர் அலுவலக கட்டிடத்துக்கும் பரவியது.

இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் உள்பட பல இடங்களில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரு கட்டிடங்களிலும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.

தீயணைப்பு வீரர்கள் நாலாபுறமும் கட்டிடத்தை சூழ்ந்து நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்பு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்துக்குள் உள்ளே சென்று புகை மூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பழைய கட்டிடத்தின் “சீலிங்” இடிந்து தீயணைப்பு வீரர் அன்பழகன் மீது விழுந்தது. அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.

அவரை மீட்பதற்காக கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா, மற்றொரு அதிகாரி முருகன் மற்றும் வீரர்கள் சென்றனர். அவர்கள் மீதும் கட்டிட சீலிங் இடிந்து விழுந்தது. இதில் பெண் அதிகாரி பிரியா, முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற வீரர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



மேலும் பிரபாகரன் என்ற வீரர் லேசான காயத்துடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் தற்போது மோசமான நிலையில் உள்ளது. இடிந்து விழும் அபாயம் இருப்பதால் வீரர்கள் உள்ளே செல்லவில்லை.

ஸ்கை லிப்ட் ஏணி மூலம் வெளியில் இருந்தவாறே தீயை அணைத்து காலை 9 மணிக்கு முழுமையாக கட்டுப்படுத்தினார்கள். பலியான தீயணைப்பு வீரர் அன்பழகன் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.


அரசு துறை இயக்குனர் அலுவலகம் என்பதால் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருந்தது. கம்ப்யூட்டர் அறைகளுக்கும் ஏ.சி. வசதி இருந்தது. இரவில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கிறது. தீயில் இரு அரசு துறை அலுவலகங்களிலும் இருந்த முக்கிய பைல்கள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. கம்ப்யூட்டர்களும் எரிந்து விட்டது.

இதில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த தகவல்கள் அழிந்து விட்டது. அலுவலகங்கள் செயல்பட முடியாதபடி கட்டிடம் நாசமானதால், இரு அரசுதுறை அலுவலகங்களும் தற்காலிகமாக வேறு கட்டிடத்துக்கு மாற்றப்படுகிறது. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் சைதை துரைசாமி சென்று பார்வையிட்டார்.

தீயை அணைக்க சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதி, தீயணைப்பு இயக்குனர் போலோநாத், இணை இயக்குனர் பாலுசாமி, இணை கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், சேஷசாயி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தீ விபத்து பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தீவிபத்து நடந்த கட்டிடத்தின் அருகே தபால் அலுவலகமும், பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படும் 10 மாடி கட்டிடமும் உள்ளது. தீயில் இந்த கட்டிடங்கள் தப்பி விட்டன. தீ பயங்கரமாக எரிந்து இருந்தால் இந்த கட்டிடத்துக்கும் பரவி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

ஆனால் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது. பொங்கல் விடுமுறை என்பதால் எழிலகத்திலும், பக்கத்து கட்டிடங்களிலும் ஊழியர்கள் யாரும் இல்லை. மேலும் இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

அரசின் (முன்னாள், இந்நாள் அரசு) சம்பந்தமான பல முக்கியமான ஆவணங்கள் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலாகி போச்சுன்னு சொல்லவாரான்களோ...ம்ம்ம்....மத்திய அரசுக்கு கணினி திருடு போகும் அல்லது முக்கிய வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் காணாமல் போகும். மாநில அரசுக்கு தீ பத்தி சாம்பலாகி போகுமா...!!! 

என்னமோ பண்ணிட்டு போங்க... எங்களுக்கு மிக்சி, கிரைண்டார், மின்விசிறி, ஆடு, மாடு, கோழி, கொக்கு , வாத்து ...எல்லாம் இலவசமாக கொடுக்க மறந்திடாதீங்கப்பா

கூகுள்,பேஸ்புக் மீதான மனு இன்று விசாரணை!


கூகுள், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்கக் கோரி பத்திரிக்கையாளர் விஜய்ராய் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் 21 நிறுவனங்களுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்  அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கூகுளும், பேஸ் புக்கும் மனு தாக்கல் செய்திருந்தன.  இந்த சம்மன் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

AAMF யில் – லண்டன் நிர்வாகிகள் தேர்வு !



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அமீரகத்திலும், அதிரையிலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதின் செய்தியினையும், அதன் துவக்கப்பட்டதின் நோக்கங்களையும் அவசியத்தினையும் லண்டன் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 160 மேல் நமதூர் சகோதரர்கள் லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருகிணைக்கப்பட்டு,


கீழ்காணும் சகோதரர்களை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்துள்ளார்கள். அவை வருமாறு:


1. தலைவர்: சகோ. ரஜீஸ் கான் கடல்கரைத் தெரு 0044-7779290008

2. து. தலைவர்: சகோ. நஜீர் கீழத் தெரு 0044-7405726297

3. செயலாளர்: சகோ. இத்ரீஸ் நடுத் தெரு 0044-7466477220

4. து. செயலாளர்: சகோ. இப்ராஹீம் புதுத் தெரு

5. து. செயலாளர்: சகோ. சபுர் கான் தரகர் தெரு

6. பொருளாளர்: சகோ. ஜமால் முஹம்மது மேலத் தெரு 0044-7522062767

7. து. பொருளாளர்: சகோ. முஹம்மது இலியாஸ் நெசவு தெரு 0044-7872051340

நம் லண்டன் வாழ் சகோதரர்கள் அனவைரும் எல்லா வகையிலும் ஒருமனதாக இணைந்து மேலே தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

குறிப்பு : பிற நாடுகளில் வாழும் நம் அதிரை சகோதரர்களும் ஒருகிணைக்கப்பட வேண்டும் ( இன்ஷாஅல்லாஹ் ! )

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்- வரலாறு




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்http://www.facebook.com/photo.php?fbid=187649431330344

உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “

படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”

முசோலினி: ” யார் அவர்களை வழி நடத்துவது ?”

தளபதி: ” ஒமர் முக்தார் “

முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”

தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.

பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).

சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

ஈரான் விஞ்ஞானியைக் கொன்றது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான் - ஈரான் குற்றச்சாட்டு


ஈரான் தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கு அருகே காரில் காந்தக் குண்டினைப் பொருத்தி அதை வெடிக்க வைத்ததில் அந்நாட்டின் அணு அறிவியல் அறிஞர் முஸ்தபா அஹ்மதி ரொஸான் கொல்லப்பட்டார். அதில் 2 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள் வந்த இருவரே அந்தக் குண்டினை வெடிக்கச் செய்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
     
கொல்லப்பட்ட அணு அறிவியலாளரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.


குண்டு வெடிப்பு மூலம் அணு அறிவியலாளர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியாக இஸ்ரேலும், அமெரிக்காவும் உள்ளது என்றும் ஈரானின் அணு செயற்திட்டத்திற்கு எதிராகவே இந்தச் செயலை அந்நாடுகள் செய்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலை சர்வதேச அணு அதிகாரசபை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தச் செயல் ஈரானிய அணு விஞ்ஞானிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


ஆனால் அமெரிக்கா இந்தக் கொலைக் குற்றச்சாட்டை வழமை போல் மறுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் எந்த ஆர்வத்தையும் அது இதுவரை வெளியிடவுமில்லை.


 இஸ்ரேல் என்ற நாட்டை பூகோள வரைபடத்திலிருந்து அழித்து விட்டு பலஸ்தீனை மீட்டெடுக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடாத்தி மத்திய கிழக்கில் தனக்கிருக்கும் தடையை அழிக்க உதவுமாறும் இஸ்ரேல் அடிக்கடி அமெரிக்காவை கோரி வருகின்றது.


இந்த அரசியல் பின்னணியில்தான் ஈரான் இதுவரை மூன்று அணு விஞ்ஞானிகளை இழந்திருக்கிறது.

ஈரானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதே போன்ற தாக்குதல்கள் மூலம் 3 அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதில் 2 பேர் அணு அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மத்திய கிழக்கில் தனக்கு நிகராக அணு விஞ்ஞான அறிவியல் துறையில் எழுந்து வரும் ஈரானை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி வைப்பதில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அண்மைய காலமாக கடும் போக்குகளைக் கடைப்பிடித்து வருகின்றன. பாரிய பொருளாதார தடைகளை ஈரான் மீது அவை திணித்து வருகின்றன.


மரபு ரீதியான போர் ஒன்றிற்கான ஆயத்தங்களுடன் பல பொருளாதார நெருக்குதல்கள் மூலம் நேரடியாக ஈரானோடு மோதி வரும் இந்தச் சக்திகள், அதே வேளை மறைமுக யுத்தமாக இத்தகைய பயங்கரவாத கொலைகளை  தனது ஏஜன்ட்களை வைத்து ஈரானில் நடாத்தி வருகின்றன.  இத்தகைய கொலைகள் அணு விஞ்ஞான துறையில் ஈடுபடும் அறிவியலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இந்தத் துறையில் ஈரானை பின்னடையச் செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.


அண்மையில் சர்வதேச அணு ஆற்றல் அதிகார சபை (IAEA) ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர்பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருப்பதாக மத்திய கிழக்கின் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (Center for Middle East Studies) பணிப்பாளர் ஹிஸாம் ஜஃபர் குற்றம் சாட்டியுள்ளார்