N

11.5.21

கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது: பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம், 

மத்திய ஆக்சிஜன் குழுமம், மாநிலங்களுக்கு இடையேயான ஆக்சிஜன் பகிர்தலைக் கண்காணித்து உறுதி செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சென்று சேர்வதை இந்தக் குழு உறுதி செய்கிறது. அதன்படி நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இருப்பு வைக்கப்பட்டு இருந்த 450 டன் ஆக்சிஜனில் தற்போது 86 டன் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் அளவிற்கு கையிருப்பு இல்லை. ஆதலால் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனை எங்கள் உபயோகத்திற்கு அனுமதிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


29.5.14

அதிரை இணையதள கூட்டமைப்பு தொடக்கம்! (AWO)


அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. 

இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள் நடைப்பெற்றது.

தொடர்ச்சியாக பேசிய அதிரை ராஜேஸ் அவர்கள் "அதிரைக்கு என பல இணையதளங்கள் உள்ளன ஆனால் அவைகள் சிதறி கிடைக்கின்றன அவைகளை ஒன்று இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்" என்றார்.


மேலும் அதிரை பிறை நிருபர் M.R. முகம்மதுசாலிஹ் அவர்கள் கூறுகையில் "நாம் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும். ஊரின் ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நலன்களை காக்குவதே நமது குறிக்கோள்" என்றார்.

இதனை அடுத்து பேசிய அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் Z.முகம்மது சாலிஹ் அவர்கள் " நமது நோக்கம் யாவும் ஒன்றே எனவே நாம் ஒன்றுப்பட்டு செயலாற்றுவது தான் சிறந்தமுறை ஆகும். எந்த நேரத்திலும் நாம் ஒற்றுமை என்னும் கைற்றை விட்டு விடக்கூடாது. நாம் தற்பொழுது ஊடகம் என்னும் முக்கிய பொறுப்பில் உள்ளோம் ஊரில் யார் பொதுமக்களுக்கு சேவைகள் செய்யாமல் தங்களது அரசு பொறுப்பை தவறாக பயன்படுத்துகின்றனரோ அவர்களில் போலி முகத்திரையை நாம் கிழிக்க வேண்டும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவர்களின் உண்மை முகம் அறிந்து வாக்களிக்க நாம் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்" என்றார்.

கடைசியாக அதிரைக்கு என தனி இணையதள கூட்டமைப்பு Adirai Web Organization (AWO) உருவாக்கி செயல்படுவது என தீர்மானம் ஏற்றப்பட்டது.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள இணையதளங்கள் விபரம்:





இப்படிக்கு



24.1.14

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி


40-வயதுக்கு மேல் லேசான நெஞ்சுவலி வந்தாலும் இசிஜி எடுத்து உண்மையான மாரடைப்பை உணர்ந்து கொள்ளலாம். சாதாரண தசைவலி,  வாய்வுப்பிடிப்புகள், வயிற்றுவலி போன்றவை கூட நெஞ்சில் வலியை ஏற்படுத்தும். எனவே 40-வயதுக்கு மேல் இசிஜி எடுத்துப் பார்த்துக்கொள்வது  நல்லது. 


இரத்தத்தில் கொழுப்புச்சக்தி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இரத்தக் குழாயை அடைக்கும் இரத்தம் உறைந்த கட்டிகள்  வுலீசழஅடிரள உண்டாகாமல் காக்கலாம். மதிய உணவு தடபுடலாக சாப்பிட்டதும், உடனே படுத்து உறங்கககூடாது. அப்போது இரத்த ஓட்டம்  மெதுவாகச் செல்லும். அதுவும் அந்த அடைக்கும் கட்டிகள் உண்டாகக் காரணமாகும். 



குளிர்காலத்தில் குளிர்ந்தநீரில் குளித்தலாகாது. குளிர் இரத்தக் குழாய்களைச் சுருங்கச்செய்யும். அதிக கோபம். அதிக துக்கம், அதிர்ச்சிகள் இவற்றால்  இதயம் தாக்கப் படக்கூடாது. எதையும் தாங்கக்கூடிய சக்தி இதயத்திற்கு வேண்டும். புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் அறவே  கூடாது. 



இரும்பு சக்தி குறைதல், வைட்டமின் பி2, பி12, குறைதல், வைட்டமின் சி குறைதல், வயிற்றில் பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சுதல், இவையெல்லாம்  இரத்த சோகைக்கு காரணங்கள். நல்ல காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பால், முட்டை, இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சோகை வராமல்  தடுக்கலாம். சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு எளிதில் ஏற்படும். 

27.10.12

தியாக திருநாள் வாழ்த்துக்கள்


15.9.12

Android App For Adirai Blogs


New android App available for Adirai Blogs.


Easy Way To Browse

                                           





















அதிரை இணையதங்களை உங்கள் கைபேசியில் சுலபமாக காண்பதற்கு இந்த  (Android App)  நீங்கள் (Download) செய்து கொள்ளுங்கள்.

20.8.12

மருதாணி பயன்படுத்திய குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பரபரப்பு!


மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.

பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

அதிரை தண்டர்

3.8.12

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..!

புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.

ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை திறமையாகக்கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு.
(புகாரி, முஸ்லிம்).
ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்- லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விஷயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.


நன்றி: ஐடியல் விஷ
ன் 

6.6.12

AXகல்வி விருது 2012 வழங்கும் விழா!!

திரையில் +2 மற்றும் பத்தாம் வகுப்பில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களை கவுரவிக்கும்முகமாகவும் மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி அவார்டு இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெறும் அனைத்து முஹல்லாஹ் 6வது கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் ஆசிரிய பெருந்தகைகள் என பெரும்பாலலோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கேடயமும் ரொக்க பரிசுகளும் வழங்க உள்ளனர்  . 


இந்த முக்கியம்வாய்ந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடைபெற உள்ளதால் சக வலைதளத்தார்களும்,துடிப்புமிக்க இளம் எழுத்தாளர்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ள அதிரைசெய்தி  கேட்டுகொள்கிறது.



பன்னிரெண்டாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : மாணவி எம். ஆஃப்ரீன் பானு,
மதிப்பெண்கள் : 1160 / 1200
பரிசுத்தொகை : ரூ 5000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி

இரண்டாம் பரிசு :
பெயர் : எம்.ரிஹானா.
மதிப்பெண்கள் : 1147 / 1200
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாம் பரிசு :
பெயர் : ஜாஃப்ரின்
மதிப்பெண்கள் : 1137 / 1200
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : ஜஃபருல்லாஹ்/உபயதுல்லாஹ்


முதலிடம்
ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி


முதல் பரிசு : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : M.நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )

இரண்டாமிடம்

நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி


இரண்டாம் பரிசு : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாமிடம்

சமீரா:461/500 இமாம் ஷாஃபி  மேல். பள்ளி
மூன்றாம் பரிசு : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ்



சிறப்பு பரிசுகள் :

இஃபாத் ரஹ்மான்
முதலிடம் கா.மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1048/1200

எஸ் ஃபாத்திமா 
முதலிலிடம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1027/1200

2.6.12

SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால்  நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முன்னதாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் M. அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இறுதியாக அதிரை SDPIன் நகர செயலாளர் S.முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

12.5.12

அரசு வேலை விழிப்புணர்வு & வழிகாட்டி முகாம்!


கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா என்கிற தேசிய மாணவ இயக்கத்தின் சார்பில் அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் அதிரையில் நடைப்பெற உள்ளது.
அரசுத்துறையில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறந்தள்ளப்படுவது ஒருபுறம் இருக்க, துரதிஷ்டவசமாக இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் அரசு பணிகளுக்கு செல்வது குறித்து சிந்திப்பது கூட இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நமதூரை சார்ந்த படித்த இளைஞர்கள் சரியான விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லாததால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதும் இல்லை.
இதனை மாற்றும் நோக்குடன் தான் தேசியளவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விளைந்த மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் எதிர்வரும் 26.05.2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் “அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் நடைப்பெற உள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் – ன் ஒருங்கிணைப்பாளர் ரசுலுதீன் தலைமையில் நடைப்பெற இருக்கும் இம்முகாமை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி துவக்கி வைக்க உள்ளார்.
அரசு வேலை குறித்து பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வரும் திருச்சி M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் P.M. மன்சூர் அவர்களும், புதுச்சேரி அரசு கல்வி துறையின் இணை செயலாளர்          L. முஹம்மது மன்சூர் அவர்களும் கலந்துக் கொண்டு வழிகாட்ட உள்ளனர்.
பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் +2 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவு செய்ய கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீமை 95006 99858 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளவும்.