N

9.2.11

உடல் நலம் குறித்த தகவல்களை அறிய இலவச ஹெல்ப்லைன்

புதுடெல்லி: உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு சரியான பதில் பெற, நாட்டிலேயே முதல்முறையாக போனில் தகவல் பெறும் இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெலிகேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் இந்த சேவையை போன் மற்றும் இணைய தளத்தில் 24 மணி நேரமும் அளிக்கிறது.

மக்கள் தங்கள் உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு ஆண்டு முழுவதும், எந்நேரத்திலும் போனில் பதில் பெறலாம். நோய் அறிகுறிகள், நோய், சிகிச்சை முறை, மாற்று சிகிச்சை, மருந்துகள், பின்விளைவுகள், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் உட்பட எல்லா தகவல்களும் கிடைக்கும்.

போனில் தகவல் பெற 3300 6666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இணைய தளத்தில் சந்தேகங்களுக்கு பதில் அறிய,

www.healthline24+7.com

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு நம்பிக்கையான, மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு ஏற்ப தகவல்களை இலவசமாக இந்த சேவை மூலம் பெறலாம். சந்தேகங்களுக்க சிறந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். நோய்க்கு டாக்டர்கள் உங்களுக்கு பரிந்துரைத்துள்ள மருந்து, மாத்திரைகள் குறித்த சந்தேகங்கள், மாற்று மருந்துகள், மருந்துகளின் விலைகள் உட்பட எல்லா தகவல்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.